அந்தக் கணங்கள்
கலைந்த முடி கோதி விட்ட
அம்மாவின்
கை விரல்கள் ..
சின்ன வயசில்
பள்ளிக்கூடத்திற்கும்
ஆஸ்பத்திரிக்கும்
தலை சாய்த்துச் சென்ற
அப்பாவின் தோள்கள்
முகம் பார்த்த போதெல்லாம்
பூரிப்பாய் புன்னகைத்து
நண்பனின்
கைகோர்த்துத் திரிந்த நாட்கள்
அவளின் பார்வை பட்ட
நிமிடங்கள்
இன்றில்லை
எனினும்
உறைந்து போயிருக்கின்றன
இதயத்தில்
அந்தக் கணங்கள் !
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக