பிரிவு


நீ போகிறாய் ..


ஒரு கன்றுக் குட்டியைப்போல 

புரண்டு கதறுகிறது 

மனசு !


சத்தம் போட்டு 

அழுது தீர்க்கக் கூட  

இயலாதவாறு செய்துவிடுகின்றன 

சுற்றங்கள்..


தொலைந்து போகாத கட்டுப்பாடுகள் 

துயரத்தைச் சேமிக்க்கின்றன 

தண்ணீர் வற்றிப் 

பொருக்கு வெடித்து கிடக்கும் நிலம் போல 

நீயில்லாமல் 

நினைவுகளின் வடுக்களோடு நான் ..


கையசைத்துவிட்டு 

உள்ளே போகிறாய் 

எனது பெருமூச்சை 

சிறிதேனும் 

ஞாகபப்படுத்த வில்லையா 

இந்த ரயில் !


சொல் 


நீ 

எனக்கென 

வாங்கி தருவதாய்ச் சொல்கிற 

எதையும் விட 

முந்தா நாள் 

என் கூந்தலில் வைத்து விட்ட 

மல்லிகைப் பூ 

அதிகமாய்ச் சிலிர்ப்பூட்டுகிறது 


ஒரே ஒரு கேள்வி 

என்னைப் போல் 

நீயுமங்கே யோசிப்பாயா? 


கணிப்பொறி 

திரைப்படம் 

தொலைப்பேசியில் வழியும் 

பெண்ணின் குரல் 

கொஞ்சம் பீர் 

எண்ணக்கிடைக்கிற பணம் 

என என்னை மறப்பாயா ?


போயேன்..

நீ கொடுத்த 

முத்தத்தின் ஈரம் 

மூச்சுக்காற்றின் கதகதப்பு 

காதல் நிறைந்த பார்வை 

இவை எவற்றையும் 

எந்த ரயில் 

ஏற்றிச் செல்ல முடியும்?


இரா. இலட்சுமணன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை