இ லட்சுமணனின் கவிதைகளைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி .."அடடா..இறந்து விட்டாரா?" இத்தனை நுட்பமாக தன்னைச் சுற்றிலும் உள்ள வாழ்க்கையையும், மனிதர்களையும், மரங்களையும் கவனித்தவர் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்ற ஏக்கம் நிச்சயம் ஏற்பட்டது. ஆனால், வாழ்ந்திருந்தால், அவர் இன்றைய தினங்களின் அவலங்களை நோக்கி (குறிப்பாக வக்கீல் வேலையிலிருந்து) கவிதை எழுதுவதையே நிறுத்தியிருப்ப்பார் எனத் தோன்றுகிறது. களத்து மேட்டில் கூட்டாஞ்சோறு தின்று, பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன் அப்பா, அம்மா விளையாடி, பச்சோந்தியின் வாயில் மூக்குப் பொடி தூவி, தட்டான் பிடித்து, வண்ணத்து பூச்சிகளை தொடர்ந்த தன் இளமைக் காலத்துடன் 'பொம்மைகளோடும், கேபிள் டிவி, வீடியோ கேமுடனும் சபிக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளின் பால்யத்தை ஒப்பு நோக்கி அவரது கவிதை நெஞ்சு நின்று போயிருக்கும் இலட்சுமணனின் பார்வையின் நுட்பம் பல கவிதைகளில் தெரிகிறது மேல்மூச்சு வாங்குகிற புயல், தார்குச்சிகளை அலட்சியம் செய்து மண்டியிடும் மாடு, காரணம் எதுவுமின்றி அலையும் தெரு நாய், மௌனத்தாலும், கவிழ்கிற பார்வ...
அண்ணனைப்போல் இரு அல்லது இருக்காதே ஓப்பீடாய்ப் போதனைகள் அயல்நாட்டு ஒற்றன் போல் பள்ளி நாட்களில் தொடரும் நிழல் அதட்டப்படவும் குட்டுப்படவும் சாயம் மங்கி பற்றாமல் போன சட்டைகளைப் புத்தம் புதிய காப்பியாய் அணிந்து கொள்ளவும் தம்பி என ஓருருவம் ! எப்போது வாய்க்கும் எனக்கென ஒரு பிம்பம்? வெறுப்புதான் ஆயினும் இன்று அண்ணா வரப்போகிறான் என்றதும் மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறது இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக