தொடரும் நிழல்


அண்ணனைப்போல் இரு 

அல்லது 

இருக்காதே 

ஓப்பீடாய்ப் போதனைகள் 


அயல்நாட்டு ஒற்றன் போல் 

பள்ளி நாட்களில் 

தொடரும் நிழல் 


அதட்டப்படவும் 

குட்டுப்படவும் 

சாயம் மங்கி 

பற்றாமல் போன சட்டைகளைப் 

புத்தம் புதிய காப்பியாய் 

அணிந்து கொள்ளவும் 

தம்பி என ஓருருவம் !

எப்போது வாய்க்கும் 

எனக்கென ஒரு பிம்பம்? 


வெறுப்புதான் 

ஆயினும் 

இன்று 

அண்ணா வரப்போகிறான் 

என்றதும் 

மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறது 


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

இசை