வீடு திரும்பல்

சுவர்க்கோழிகள் கிறீச்சிடும் 

இராப்பொழுதில் 

வீடு திரும்புகையில் 



கலைந்த உறக்கத்தோடு 

எழும் குரலைப்போல 

வார்த்தைகளைப் பிரயோகித்து,

கதவு திறக்கையில் 

மௌனத்தாலும் கவிழ்கிற பார்வையாலும் 

மன்னிப்புக் கோரி ..


தாடைகள் அசைகின்ற  சத்தம் குறைக்க 

மென்மையாய் சாப்பிட்டு 

பூனை போல் தண்ணீர் குடித்து 

விளக்கணைத்துப் படுக்கையில் 

சொல்லிக் கொள்கிறேன் ..

நாளைக்கேனும் ..

நேரத்தில் வர !


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை