சுமை

 



அங்கொரு நிமிடமாய் 

இங்குச்சில நேரமாய் 

காரணம் எதுவுமின்றி 

அலையும் 

குட்டி போட்ட தெரு நாய்க்கு 

பெருத்து தொங்கும் பால்மடி 

எப்போதேனும் 

சுமக்க முடியாததாய் 

தோன்றுமா என்ன !


இரா. இலட்சுமணன்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை