தொடரும் பெரும் பயணம்
பாசி படர்ந்த கோணல் தலையுடன்
சுழலும் பந்தோ
மூச்சு திணற ஓடி அலையும் !
மாதங்கள்
வினாடிகளாய்
வருடங்கள்
நிமிடங்களாய்
காலம் கிழவனாகும்
தண்ணீரும்
தகிக்கும் வெயிலும்
பனியும் என மாறி மாறி
அவசர கதியில்
ஆடைமாற்றம் நிகழும் !
பூமியின் உடலுக்குள்ளே
கபாலங்கள் மறைய மறைய
ஆசையை புதைக்க முடியா
அவஸ்தைகள் திமிறித்திமிறி
தலைமுறைகள் தழைக்கும் !
முடியாத ஆசைகளோ
தினம் தினம் முகிழ்க்கும்
ஊழியின் முடிவை நோக்கி
இறந்த உடல்கள் உற்றுப் பார்க்கும்
வாரிசு வடிவாய்
ஆசைகளின் தட்டி ஏந்தி
உடல்களின் ஊர்வலமோ
தொடர்கிறது யுகம்யுகமாய் !
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக