ஒத்திவைப்பு

சிறுநீர் கழிக்கத் 

தூண்டப்படுகையில் 

வீதியென்றும் பார்ப்பதில்லை 

நாகரீகத்தை புறந்தள்ளலாம்.


கடிகார முட்களின் மீது 

பார்வை அமர்ந்திருக்கும் 

பசியாறும் நேரம் பார்த்து !


காலந்தப்பினால் 

எல்லாம் போச்சென்று 

ஏராளமாய் உபதேசம் இருக்கிறது 


ஆனாலும் 

அப்புறம் எழுதலாம் 

ஒத்திவைக்க எப்போதும் 

இலகுவாய் இருக்கிறது 

கவிதை !



இரா. இலட்சுமணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை