ஆமென்

பசிக்கிறவனுக்கு 

உணவு கிடைப்பதாயில்லை 


ரொட்டி துண்டுகளல்ல ..

சாத்தானின் கனிகளாவது 

கிடைக்காதா? 


மரணத்திற்கேதுவான 

துயரங்களத்தனையோடும் 

வாழ்க்கை !


பிதாவே 

எதிர்பார்க்காதீர் எம்மிடமிருந்து 

உம் சித்தப்படியே ஆகக்கடவது 

என்ற வார்த்தைகளை !


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை