எம் மக்கள்

வெள்ளைக்காரன் பட்டாளத்துல 

சிப்பாயா இருக்கறவன்னு தெரிஞ்சதும் 

அவனைப் 

பாதி சவரத்தில் தொறத்துண

வைரப்பன் தாத்தா 



என்னைக்காவது ஒரு நாளு 

வசதி வந்துடாதா எனக் 

காது குத்தின   ஓட்டை 

தூர்ந்திடாமல் 

வேப்பங்குச்சி செருகியிருக்கும் 

பாக்கியம் பெரியம்மா 


புள்ளத்தாச்சி வயத்தில உதைக்கிற மாதிரி 

மரத்தை வெட்டாதீங்கப்பா 

மரத்தையும் நேசிக்க சொன்ன 

காசியம்மா பாட்டி 


இவர்களோடு 

சாதியைச் சொல்லி 

காதலை புதைத்த கல்லறையோடும் 

என் கிராமம் 


இரா. இலட்சுமணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை