அறிவுரை
தாத்தாவும், பாட்டியும்
அடிக்கடி சொன்னாங்களாம்
பணம், காசை செலவு பண்ணாதே..தண்ணி மாதிரி !
காணி, கழனி வித்துட்டுப் பட்டணம் வந்தாராம்
பரோபகார அப்பா !
கிராமம், வயல், குயிலு, குருவி, கருவ முள்ளு
எதுவும் பார்த்ததில்லே
ஏக்கம் யாருக்கும் புரிஞ்சதில்லே
அப்பா இப்போ
அடிக்கடி சொல்லுவாரு
காசு பணம் மாதிரி செலவு பண்ணாதே
கார்ப்பரேஷன் தண்ணிய
அப்பாவாயிருந்தா என்ன
அடியேனாயிருந்தா என்ன
யாரால முடியும்
அறிவுரை கேட்டு அப்படியே நடக்க !
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக