சொல்ல முடியுமா ?
துயரங்களின் மடியில்
தலைசாய்த்துக் கிடக்கும்
கவிதையைப் பாருங்கள்
உதடு விரித்து மலர்கிற
சிரிப்பு தெரியும்
வெடிக்கக் காத்திருக்கிற
சோகம் தெரியுமா ?
காயத்திற்கும், வேதனைக்கும்
என்ன வேற்றுமை?
காயங்களினின்றும்
ரத்தம்
வேதனைகளினின்றும்
கண்ணீர்
சொல்ல முடியுமா..
காயம் பெரிதா ?
வேதனை பெரிதா ?
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக