நகர வாழ்க்கை


பைத்தியம் பிடித்த தெரு நாய்களைப் போல 

இங்குமங்கும் விரையும் 

மோட்டார் வாகனங்கள் ..


மனசுக்குள் குமட்டும் 

சக மனிதனின் 

வியர்வை நாற்றத்தோடு 

பேருந்துப் பயணம் ..


அலுவலகச் சிறைக்குள் 

அமைதியைக் கிழிக்கும் 

தட்டச்சு, தொலை பேசி 


மனைவியின் 

முகம் பார்த்துப் பேசவும் 

வாய்ப்பின்றி கழியும் நாட்கள் ...


நகரங்கள் நோக்கிச் செல்லும் சாலைகளற்ற 

கிராமத்துக்குள் 

தவறியேனும் 

சென்றிடல் வாய்க்குமோ எனக்கு ?


இரா. இலட்சுமணன்




 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை