கிளர்வு

பன்னீர் மரங்களின் கீழ் 

உதிர்ந்து கிடக்கிற மலர்கள் 

மெல்லிய மழைச்சாரலின் ஊடே 

நனைந்து செல்கிற பொழுதுகள் 

நிலவொளி நிரம்பிய 

வெளிர் வானம் 


கண்ணுக்கு புலப்படாததாய் 

இருள்சூழ் தருணங்களில் 

அலைகளின் இரைச்சல் 


ஒன்றிக்கொன்று 

தொடர்பில்லை எனினும் 

கிளர்கின்றன ஞாபகங்கள் ..

உன்னோடு பிணைப்புள்ளதால் ..



இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை