நேற்றைய பிணங்களும் முந்தைய எலும்புக் கூடுகளும்

புதர் மண்டிக் கிடக்கும் 

கல்லறைத் தோட்டங்கள் 


ஆர்ப்பாட்டமாய்க் கழித்த பொழுதுகள் முடிந்து 

நெருக்க நெருக்கமாய் 

புதைந்து போன  உடற் சருகுகள் !

வசீகரம் இழந்து நிற்கும் 

சிலுவைக் கோடுகள் !




சோகம் கவ்விக்கொள்ள 

என்ன இருக்கிறது ? 

பிறப்பும், திருமணமும் போல 

மரணமும் ஒரு நிகழ்வு !


எவரில்லா விடின் 

இருள் சூழ்ந்து விடும் ?


நேற்றைய பிணங்களும் 

முந்தைய எலும்புக் கூடுகளும்  

வரிசையாக்க மண்ணுக்குள் !


இறந்தவர் 

சுமப்பவர் 

பேதமின்றிப் 

புன்னகையோடு வரவேற்கும் 

மயானப் பூக்கள் !


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை