கருப்பு, வெள்ளையில் ஒரு பழைய ஆல்பம் - கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அணிந்துரை
துயரங்களின் மடியில் தலை சாய்த்து கிடைக்கும் கவிதையை பாருங்கள் என்று இரா. லட்சுமணனின் ஒரு கவிதை துவங்குகிறது. நானும் அப்படித்தான் துவங்க வேண்டும்.
லட்சுமணனுடைய கவிதைகள் ஒரு புறத்திலும், லட்சுமணனைப் பற்றிய நினைவுகள் இன்னொரு புறத்திலுமாக இருக்கிற நிலையில், மீண்டும் மீண்டும் லட்சுமணனைப் பற்றி அவருடைய நண்பர்கள் பகிர்ந்து கொண்டவை மீதே முழுமனதும் கவிந்திருக்கிறது. காற்று வேப்பம் பூக்களை உதிர்க்கையில் எனக்குக் காற்றை விட,எதிர் நிற்கிறவர் சிகையின் மீதும், என் உள்ளங்கையிலும் உதிர்ந்த சின்னஞ் சிறு பூக்களை ஏந்திக் கொள்ளவே தோன்றுகிறது. காற்றுக்கு என்ன என்றைக்கும் இருக்கிறது அது. மறுபடியும் வீசவும் கூடும்.
"எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று ஜெயந்தனின் கவிதையை லட்சுமணன் சொல்லிச் சொல்லி ரசிப்பாராம். அவருக்கு எதுவும் நடக்கலாம் என்பதை அவரே அனுமாத்திருந்தாரோ என்னவோ ! மரணத்தை பற்றி அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்
"மரணத்திற்கேதுவான துயரங்கள் அத்தனையோடும் வாழ்க்கை"
"பிறப்பும், திருமணமும் போல மரணமும் ஒரு நிகழ்வு"
"தேதி குறிப்பிடாத மரண தண்டனைக் கைதிகள் நாம் எல்லாரும் "
"யாரேனும் பகிர்ந்து கொள்ள முடியுமா மரணத்தை?"
அவருடைய எந்த காரீயவிதமான பகிர்வுகளின் ஒரு பகுதியாக அவருடைய கவிதைகள் இருக்கின்றன
திரைப்படங்களிலும் சரி, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளிலும் சரி, ஒரு நல்ல கலைஞன், ரயில் நிலையத்தையும், புகைவண்டியையும் பற்றிச் சொல்லும்போது, எல்லோர் மனமும் நீராவி கக்கி, நெஞ்சு கனத்துக் கூவி நகரும். வெற்றுத் தண்டவாளங்களின் அபூர்வ வளைவுகளிலும் ஸ்லீப்பர் கோட்டைகளில் முறுக்கப் பட்டிருக்கிற திருகாணிகளிலும் கருங்கல் ஜல்லிகளுக்கு இடையில் முளைத்துக் கிடக்கிற கரும்பச்சைப் புற்களிலும் எத்தனை எத்தனை காலத்து கையசைப்புகளும் , கண்ணீரும், பெரு மூச்சும் அக்கினி நட்சத்திரத்துக் கானல் அலைகளைப்போல விம்முகின்றன. அவற்றை எல்லாம் நினைவு படுத்துகிறது போல லட்சுமணனின் கவிதைகளிலும் அங்கங்கே புகை வண்டிப் பெருமூச்சுகள்.
பழமலையின் குழுமூர் ஆயியை போல், இப்போதைய கவிதை வரிகளின் இடையே வரையப்படுகிற எல்லா முகங்களிலுமே ஊரும் உறவும் உணரசும் இனமும் திரண்டு ஜீவனடைந்து விடுகின்றன. கனத்த இருட்டுப் போன்ற தாள்களில் ஒட்டப்பட்ட கருப்பு வெள்ளைபி புகைப்படங்கள் உள்ள, பழைய ஆல்பங்களாக, லட்சுமணன் வைரப்பன் தாத்தாவும், "காதுகுத்தின ஓட்டை தூர்ந்திடாமல் வேப்பங்குச்சி சொருகியிருக்கிற பாக்கியம் பெரியம்மாவும் காசியம்மா பாட்டியும் நமக்கு முன்பு நடமாடுகிறார்கள்
நாம் அவர்களுடன் நின்று விடுகிற போது, லட்சுமணன் பசி மறந்து வண்ணத்து பூச்சிகளை துரத்தி கொண்டு இருக்கிறார். கெளுத்தி மீன்கள் பிடித்த அவரின் கைகள் சொரியும் ரத்தத்தின் சிதையாத ஞாபங்களுக்கு இடையில் குருவிகளின் சிறிய தொண்டைகளிலிருந்து பெருகுகிற இசையாக படுகின்றன கீழ் வரும் பகுதிகள்:
என்னவாய் இருக்கும்
திறந்த வாயிற்படியில்
ஒரு முகம் தோன்றி
ஏதேனும் உரைக்கட்டும்
கவலையில்லை
பார்க்கும்போது
பூட்டில்லாமலிருத்தல் வேண்டும் !
சொல்லிக்கொள்கிற மாதிரி
அழகானதாய் இல்லை
சந்தன மரங்கள்
லட்சுமணனை நான் நேரில் பார்த்ததில்லை. அவருடைய கவிதைகள் மூலமும், நண்பர்களின் நெகிழ்ந்த சொற்கள் மூலமாகவும் எனக்குள் உருவாகியிருக்கிற சாயல்களும், முகமும் "நகரங்கள் நோக்கிச் செல்லும் சாலைகள் அற்ற கிராமத்து வீட்டுக்கு திரும்ப நினைக்கிற ஒரு மனிதனை அடையாளம் காட்டுகின்றன
துவங்கியது போல, முடிக்கிறதையும் லட்சுமணனின் கவிதை வரிகளோடு தான் முடிக்க வேண்டும்
மலர்கள் அழகானவை தாம்
எப்படி ரசிக்க முடியும்
இறுதி ஊர்வலத்தின் பாதையில்
கல்யாண்ஜி
3.5.97

ஆசீர்வதிக்கப்படுவேனாக
பேருந்து பயணத்தில்
யாரோ ஒருவரின் தோளில் இருக்கும்
குழந்தையின் கால்கள்
என் மீது படும்படி !
என்னவாய் இருக்கும்
தெருவில் அலைந்து திரிகிற
அந்தப் பைத்தியத்தின் பெயர் ?
திறந்த வாயிற்படியில்
ஒரு முகம் தோன்றி
ஏதேனும் உரைக்கட்டும்
கவலையில்லை
பார்க்கும்போது
பூட்டில்லாமலிருத்தல் வேண்டும் !
சொல்லிக்கொள்கிற மாதிரி
அழகானதாய் இல்லை
சந்தன மரங்கள்
லட்சுமணனை நான் நேரில் பார்த்ததில்லை. அவருடைய கவிதைகள் மூலமும், நண்பர்களின் நெகிழ்ந்த சொற்கள் மூலமாகவும் எனக்குள் உருவாகியிருக்கிற சாயல்களும், முகமும் "நகரங்கள் நோக்கிச் செல்லும் சாலைகள் அற்ற கிராமத்து வீட்டுக்கு திரும்ப நினைக்கிற ஒரு மனிதனை அடையாளம் காட்டுகின்றன
துவங்கியது போல, முடிக்கிறதையும் லட்சுமணனின் கவிதை வரிகளோடு தான் முடிக்க வேண்டும்
மலர்கள் அழகானவை தாம்
எப்படி ரசிக்க முடியும்
இறுதி ஊர்வலத்தின் பாதையில்
கல்யாண்ஜி
3.5.97
கருத்துகள்
கருத்துரையிடுக